ETV Bharat / state

ரயில் விபத்தில் மாயமான 8 தமிழக பயணிகள் இவர்கள் தான் - பெயர் பட்டியல் வெளியீடு! - Coromandel Express train accident exclusive

ஒடிஷாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தமிழக பயணிகளில் 8 பேரை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் தெரியப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Emergency
மையம்
author img

By

Published : Jun 4, 2023, 10:35 PM IST

சென்னை: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கடந்த 2ஆம் தேதி, சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட பயங்கர விபத்தில், இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். இந்த ரயில் விபத்தால் ஒடிஷாவில் சிக்கித் தவித்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக, ரயில்வே துறை சார்பில் ஒடிசாவிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

அதில் சுமார் 300 பேர் வந்த நிலையில், பலர் அவர்களது சொந்த ஊர்களில் இறங்கிவிட்டனர். மீதமிருந்த 133 பேர் இன்று(ஜூன் 4) காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுக்கு ரயில் நிலையத்திலேயே முதலுதவி சிகிக்கை அளிக்கப்பட்டது. காயமடைந்த 8 பேர் மட்டும் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில், விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தமிழர்களில் எட்டு பேரை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை என தமிழ்நாடு அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அவசரகால செயல்பாட்டு மையம் இன்று (ஜூன் 4) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஒடிசா மாநிலம் பாலசூரில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும், உயிரிழந்தவர்களை கண்டறிந்து அவர்களது குடும்பத்தினருக்கு உதவிடவும், முதலமைச்சர் உத்தரவின் பேரில் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. மீட்புப் பணிகள் குறித்த விபரங்களை பெறுவதற்காகவும், பயணிகளின் உறவினர்கள் பயணிகளைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளது பட்டியல் தென்னக ரயில்வேயிலிருந்து பெறப்பட்டு, அதில் தமிழ்ப் பெயர் கொண்டவர்களையும், தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 127 நபர்களை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து தொடர்பு கொண்டதில் 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. எஞ்சிய 8 நபர்களது செல்பேசி மற்றும் முகவரி இல்லாத நிலையில் அவர்களை தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவில் முகாமிட்டுள்ள மீட்புக் குழுவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டு அறையும் இணைந்து தொடர்பு கொள்ள இயலாத நபர்களுடைய விபரங்களை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிசாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இந்த ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவருகிறது. விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் நபர்களது விபரங்களை இதுவரை பரிசீலனை செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் காயமுற்று சிகிச்சை பெறவில்லை என்ற விவரமும் தெரியவந்துள்ளது.

இவரை சேகரிக்கப்பட்ட விபரத்தின் அடிப்படையில் தொடர்பு கொள்ள இயலாத நாரகணிகோபி(34), கார்த்திக்(19), ரகுநாத்(21), மீனா(66), எ.ஜெகதீசன்(47), கமல்(26), கல்பனா(19), அருண்(21) ஆகிய 8 நபர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒடிசாவில் இருந்து சென்னை வந்த சிறப்பு ரயில்.. 133 பயணிகள் வருகை; 8 பேருக்கு சிகிச்சை என அமைச்சர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.