ETV Bharat / state

ரூ.1 கோடி கேட்கும் இலங்கை; தமிழக மீனவர்களை மீட்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

author img

By

Published : Apr 12, 2022, 12:58 PM IST

Updated : Apr 12, 2022, 1:48 PM IST

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 16 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை கூறியுள்ள நிலையில், அந்நாடு வசமுள்ள மீனவர்களை தமிழ்நாடு அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

o-panneerselvam-has-condemned-sri-lankan-court-for-asking-for-rs-1-crore-to-give-bail-for-tamil-nadu-fishermenதமிழ்நாடு மீனவர்கள் ஜாமினுக்கு ரூ.1 கோடி கேட்ட இலங்கை நீதிமன்றத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்
o-panneerselvam-has-condemned-sri-lankan-court-for-asking-for-rs-1-crore-to-give-bail-for-tamil-nadu-fishermen தமிழ்நாடு மீனவர்கள் ஜாமினுக்கு ரூ.1 கோடி கேட்ட இலங்கை நீதிமன்றத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மார்ச் 23ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அனைவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

அதனைத்தொடர்ந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரும் (ஏப். 8) கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, மீனவர்கள் 12 பேரும் ஜாமினில் செல்ல விருப்பப்பட்டால் ஒவ்வொரு மீனவரும் தலா ரூ.1 கோடி நீதிமன்றத்தில் உத்தரவாதத் தொகையாகக் கட்ட வேண்டும் எனவும், பணம் கட்ட தவறினால் வருகின்ற மே 12ஆம் தேதி வரையிலும் காவல் நீட்டிப்பு செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார்.

இதேபோல், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும், ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இந்த 4 மீனவர்களுக்கும் வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி வரையிலும் காவல் நீட்டிப்பு செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை நீதிமன்றத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்
இலங்கை நீதிமன்றத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்

இதனிடையே, மீனவர்களை பிணையில் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் தலா ரூ.1 கோடி உத்தரவாத தொகை கேட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுவாக நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், அந்த நீதி விரைந்து கிடைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் தான் நீதிமன்றங்கள் இயங்குகின்றன.

ஆனால், நீதிமன்றங்களே அநீதியான தீர்ப்பை வழங்கும் நடைமுறை இலங்கை நாட்டில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. இராமேஸ்வரத்திலிருந்து 23-3-2022 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு அண்மையில் இலங்கை நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவர்கள் சிறையில் இருந்து வெளியே வர நினைத்தால் ஒவ்வொரு மீனவரும் தலா ஒரு கோடி ரூபாய் செலுத்திவிட்டு பிணையில் செல்லலாம் என்று உத்தரவிட்டது.

இலங்கை நீதிமன்றத்தின் இந்தச் செயல் நீதிக்குப் புறம்பானது. இந்தத் தீர்ப்பினை கேட்டு தமிழ்நாடு மீனவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் மீது மிகப் பெரும் அநீதியை இழைத்துள்ள இலங்கை நீதிமன்றத்திற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மீனவர்கள் ஜாமினுக்கு ரூ.1 கோடி கேட்ட இலங்கை நீதிமன்றத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்

மீன்பிடித் தொழில் என்பது மீனவ மக்களின் வாழ்வாதாரம். இந்தத் தொழிலில் வரும் சொற்ப வருமானத்தை வைத்துத்தான் மீனவர்கள் குடும்பம் நடத்துகின்றனர். இலங்கைக் கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும், சிறைபிடித்தலுக்கும் இடையே மீன்பிடித் தொழிலை தமிழ்நாடு மீனவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களுடைய வறுமைதானே தவிர வேறு ஒன்றுமில்லை. இப்படிப்பட்ட மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் ஒரு கோடி ரூபாய் கேட்பது என்பது அநியாயத்தின் உச்சக்கட்டம்.

இந்த அளவுக்கு பிணைக் கட்டணம் செலுத்தக்கூடிய சக்தி மீனவர்களிடம் இருந்திருந்தால், அவர்கள் இந்தத் தொழிலையே மேற்கொள்ளமாட்டார்கள். ஒரு கோடி ரூபாய் பிணைக் கட்டணத்தை தமிழ்நாடு மீனவர்களால் செலுத்தவே இயலாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஒருவேளை இலங்கை நாட்டில் உள்ள தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக இந்த அளவுக்கு பிணைத் தொகை செலுத்த வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கலாம். அதே சமயத்தில், அந்தத் தொகையை செலுத்தக்கூடிய சக்தி மீனவர்களுக்கு இருக்கிறதா என்பதையும் நீதிமன்றம் ஆராய வேண்டும்.

இலங்கை நாடு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்றால், அதற்குத் தேவையான நிதி உதவியை பிற நாடுகளிடமிருந்து ராஜ தந்திர முறையில் கேட்டுப் பெற வேண்டும். அதைவிடுத்து, இதுபோன்று அநியாயமாக ஏழை மீனவ மக்கள்மீது தண்டம் விதிப்பது ஏற்கத்தக்கதல்ல. இதை ஏழை மீனவர்களால் செலுத்தவும் முடியாது.

இலங்கைக்கு பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் நாடு இந்தியா. இப்படிப்பட்ட உதவி செய்கின்ற நட்பு நாடான இந்திய நாட்டு மீனவர்களிடம் ஒரு கோடி ரூபாய் கட்டணம் செலுத்தச் சொல்வதும், அவர்களைத் துன்புறுத்துவதும், சிறைபிடிப்பதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுவதும் செய்நன்றி மறத்தலாகும்.

இலங்கை நீதிமன்றத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்
இலங்கை நீதிமன்றத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்

தமிழ்நாடு மீனவர்களை மத்திய அரசு உதவியுடன் விரைவில் மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை நாட்டு சிறையிலுள்ள தமிழ்நாடு மீனவர்களைத் தாய் நாட்டிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உதவியுடன் மேற்கொள்ள வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக மாவட்ட கட்சி - ஈவிகேஎஸ் இளங்கோவன்

Last Updated : Apr 12, 2022, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.