தூத்துக்குடி: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த மண்டலமானது திரிகோணமலைக்கு அருகே 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக வங்கக் கடலில் பலத்த காற்று வீசி வருவதால், தமிழ்நாடு தென்கடலோர மீனவர்கள் கடலுக்குச் செல்ல கடந்த இரண்டு நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்