ETV Bharat / state

பேரன் பேத்தியோடு விளையாடுங்கள் - ரஜினிக்கு சீமான் அட்வைஸ்!

author img

By

Published : Oct 5, 2020, 2:25 AM IST

நடிகர் ரஜினி அரசியலில் இறங்க வேண்டாம், இமயமலை செல்லுங்கள், நல்ல புத்தகம் படியுங்கள், பேரன் பேத்தியோடு விளையாடி வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்குமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

பனை விதை நடும் சீமான்
பனை விதை நடும் சீமான்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் 10 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கிவைத்தார்.

கொரட்டூர் பகுதியில் உள்ள சதா குளக்கரையில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் 10 லட்சம் பனை விதை நடும் நிகழ்வினை சீமான் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “இந்த நாட்டில் கிளீன் இந்தியா இருக்கிறதே தவிர, கிரீன் இந்தியா இல்லை. ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் தேவை. 1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சிகள் மரம் நட முயற்சி எடுக்கவில்லை. ராமர் கோயிலுக்கு கல் எடுத்து வரச் சொன்ன பிரதமர், மரம் நட வேண்டும் எனக் கூறவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, மக்களிடம் மட்டுமே கூட்டணி வைக்கும்.

பனை விதை நடும் சீமான்

அதேசமயம், சில கட்சிகளும் கொள்கை முரண் இருந்தாலும் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சுவரோடு வேண்டுமானலும் கூட்டணி வைக்குமே தவிர வேறு எவரோடும் கூட்டணி வைக்காது , தனித்தே நிற்கும்.

மத்தியில் இருக்கும் காங்கிரஸ் என் இனத்தின் எதிரி, பாஜக மனித குல எதிரி. மேலும் தேர்தல் ஆணையம், நீதிமன்றம், சிபிஐ அமைப்புகள் பிரதமர் மோடியின் விரல்கள் போன்றது. அவர் நீட்டச் சொன்னால் நீட்டும், மடக்க சொன்னால் மடக்கும்.

என்றைக்கு நடிகர் ரஜினி வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என்றாரோ, அன்றைக்கே அவரிடம் உள்ள முரண்பாடு நீங்கியது. நடிகர் ரஜினிக்கு நான் வைக்கக்கூடிய வேண்டுகோள், அவர் அரசியலில் இறங்க வேண்டாம். புகழ்ச்சியை மட்டுமே பார்த்தவர் அவர், நாங்கள் சந்திப்பது போன்ற அவச்சொற்களை தாங்க முடியாது. நன்றாக புத்தகம் படியுங்கள், இமயமலை செல்லுங்கள், பேரன் பேத்தியுடன் விளையாட்டுங்கள் அரசியலுக்கு வந்தால் உங்களை வசைபாடுவார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இடமில்லாமல் தொழில் முடக்கம்; இயற்கை நார் நெசவாளர்கள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.