ETV Bharat / state

சென்னை ஐஐடி-என்பிடெல் இணைப்பு - ஆன்லைன் மூலம் 720 சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்!

NPTEL-IIT Madras: ஐஐடி மெட்ராஸ் முன்முயற்சியான என்பிடெல் (தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம்) ஜனவரி-ஏப்ரல் 2024 செமஸ்டருக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.

சென்னை ஐஐடி-என்பிடிஇஎல்; 2024ம் ஆண்டுக்கான ஆன்லைன் சான்றிதழ் படிப்பு அறிமுகம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 9:35 PM IST

சென்னை: ஐஐடி மெட்ராஸ் முன்முயற்சியான என்பிடெல் (தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம்) ஜனவரி-ஏப்ரல் 2024 செமஸ்டருக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. பொறியியல், அறிவியல், மானுடவியல், மேலாண்மைத் துறைகளில் 720-க்கும் மேற்பட்ட படிப்புகளுடன், இந்த செமஸ்டரில் 30 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மேம்பட்ட கற்றல் வாய்ப்பை வழங்க என்பிடெல் திட்டமிட்டுள்ளது.

இந்த சான்றிதழ் படிப்புகளில் சேர கடைசி நாள் - 19 பிப்ரவரி 2024. ஆர்வமுடையவர்கள் ஜனவரி 2024 செமஸ்டருக்கான பின்வரும் இணைப்பு வாயிலாக தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்- NPTEL- http://nptel.ac.in/ அல்லது SWAYAM- http://swayam.gov.in/

கற்க விரும்புவோர் , என்பிடெல் ஆகிய இணைய முகப்புகளில் கட்டணம் ஏதுமின்றி பெயர்களைப் பதிவு செய்யலாம். விருப்பச் சான்றிதழ் தேர்வு எழுத விரும்புவோருக்கு கட்டணம் ரூ. 1000. தற்போது வரை 2.5 கோடிக்கும் அதிகமானோர் என்பிடெல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

இந்தப் படிப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் என்பிடெல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறும்போது, “என்பிடெல் குறைந்த கட்டணத்தில், சான்றிதழ் அளிக்கக் கூடிய ஆன்லைன் படிப்பை மிகப்பெரிய அளவில் செயல்படுத்தி, கல்வி அமைச்சகத்தின் முன்னோடி முன்முயற்சியைத் தொடர்ந்து வருகிறது. இங்கு கற்கும் மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், அவர்களின் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கவும் எங்களது விரிவுபடுத்தப்பட்ட பாடப்பிரிவுகள் உதவும் என நம்புகிறோம்." என்றார்.

690 படிப்புகளில் 6.75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மைய அடிப்படையிலான ஆன்லைன் மதிப்பீட்டுத் தேர்வை எழுதியிருப்பதால் முந்தைய செமஸ்டர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அதில் கிடைத்துள்ள வெற்றியின் அடிப்படையில் என்பிடெல் கூடுதல் படிப்புகளோடு புதிய செமஸ்டரை விரிவுபடுத்தியுள்ளது. என்பிடெல் செயல்பாட்டுக்கு வந்து 20 ஆண்டுகளையும், சான்றிதழ் வழங்கத் தொடங்கி 10 ஆண்டுகளையும் கடந்துள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கற்றல் தளத்தில் இந்த செமஸ்டர் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது.

'டொமைன் ஸ்கால'ரும், லூதியானாவில் என்பிடெல் பாடப்பிரிவுகளை கற்றுத் தருபவருமான உதவிப் பேராசிரியர் திரு. கரன் பல்லா கூறுகையில், "என்பிடெல் மற்றும் ஸ்வயம் இணையமுகப்புகள் எனக்கும், பிற மாணவர்களுக்கும் அவரவர் துறைகளில் ஏராளமாக கற்றுக் கொள்ளும் ஒரு தளத்தை வழங்கியுள்ளது. ஐஐடி பேராசிரியர்களிடம் இருந்து இந்த பாடப்பிரிவுகள் வாயிலாக மிகச் சிறந்தவற்றை கற்றுக் கொள்வதுடன், பேராசிரியர் என்ற முறையில் எனது மாணவர்களுடன் நான் அறிந்தவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

இந்த செமஸ்டரில் புதிய பாடப்பிரிவுகளாக திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை ஆய்வுக்கான ஆராய்ச்சி நடைமுறைகள் (Research Methodology for Planning and Architectural Studies), கணக்கீட்டு மரபியல் (Computational Genomics), கட்டமைப்பு அதிர்வு (Structural Vibration), பயன்பாட்டுப் புள்ளியியல் வெப்பஇயக்கவியல் (Applied Statistical Thermodynamics), விளையாட்டும் தகவல்களும் (Games and Information), பரிசோதனை ரோபாட்டிக்ஸ் (Experimental Robotics) போன்றவை இடம்பெற உள்ளன.

ANSYS நிறுவனத்துடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப்பிரிவுகளை என்பிடெல் வழங்குகிறது. இதன் வாயிலாக, என்பிடெல் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்ட ANSYS புதுமைப் பாடப்பிரிவுகளை நிறைவு செய்வோர் தொழிலக அங்கீகார பேட்ஜ்களைப் பெறலாம். என்பிடெல்லில் சிறந்த இடங்களைப் பிடிப்போர் ANSYS பேட்ஜ்களைப் பெறுவதுடன், தங்கள் தொழில்முறை வலையமைப்பில் அவற்றைக் காட்சிப்படுத்திக் கொள்ளலாம்.

சென்னையைச் சேர்ந்த எம்.எஸ்சி மாணவியான 'என்பிடெல் ஸ்டார்' எஸ்.யு.பாவனா கூறுகையில், "என்பிடிடெல் பாடப்பிரிவுகளை முடிப்பதன் மூலம் உறுதியான தொழில் முன்னேற்றம், மேம்பட்ட செயல்திறன், கூடுதல் அங்கீகாரம் கிடைத்தது. இதில் கிடைத்த நடைமுறை அனுபவத்தைக் கொண்டு சிக்கலான சூழலில் பணியாற்றும் விதத்தை அறிந்துகொண்டேன். எனது தொழில்முறை வெற்றிக்கு இந்தப் பாடங்கள் முக்கிய காரணிகளாகும்" எனத் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 66,000 ஆசிரிய உறுப்பினர்கள் தங்களது ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2023-ம் ஆண்டில் என்பிடெல் படிப்புகளில் இணைத்துக் கொண்டனர். இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் கற்பிக்கும் தரம் மேம்பட இந்த படிப்புகள் உதவியாக இருந்துள்ளன. என்பிடெல்லின் தலைசிறந்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டில் ஐஐடி-க்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் 321 உள்ளகப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற என்பிடெல் உதவியுள்ளது.

என்பிடெல் பிளஸ் (NPTEL+) என்பது நெகிழ்வான வடிவத்துடன் கூடிய புதிய இணையமுகப்பாகும். சுயவேகப் படிப்புகள், ஆன்லைன் முறையில் வழங்கப்படும் குறுகிய கால பாடநெறிகள் இதில் இடம்பெற்றுள்ளன. என்பிடெல் என்பது செமஸ்டர் முறை மற்றும் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பாடநெறிகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் 30 முதல் 40 மணி நேரம் வரை கற்கக் கூடியவாறு உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன. என்பிடெல் பிளஸ் இதனை நிறைவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் பறக்கும் ரயில் பாலம் சரிந்து விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.