ETV Bharat / state

திருமணத்துக்குச் செல்ல இ-பாஸ், இ-பதிவு தேவையில்லை! - 27 மாவட்டங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்,இ-பதிவு இல்லாமல் பயணம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம்
திருமணம்
author img

By

Published : Jun 25, 2021, 8:55 PM IST

* வகை 2 மற்றும் 3 இல் உள்ள மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ், இ-பதிவு இல்லாமல் பயணம் செய்யலாம்.

* வகை 1 இல் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயும், வகை 2, 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை 1இல் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கப்படும்.

இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெறவுள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) மணமகன், மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

வகை-1 இல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை -2, 3 இல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ-பாஸ் பெற வேண்டும்.

* திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காகப் பயணிக்கத் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

வகை-1 (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை

வகை-2(23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர்

வகை - 3(4 மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.