இது தொடர்பாக அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு- புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அமமுக தலைமைக் கழகத்தில் சென்ற 3ஆம் தேதி முதல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோருவோருக்கு வரும் 7ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படவிருக்கின்றன.
அந்த விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து, விருப்ப மனு செலுத்தியவர்களுக்கான நேர்காணல் வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.