ETV Bharat / state

ஹெல்மெட் போடாதது மட்டுமல்ல; இருசக்கர வாகன விபத்துக்கு மோசமான சாலைகளும் காரணம் - உயர் நீதிமன்றம் - இருசக்கர வாகன விபத்துக்கு மோசமான சாலைகளும் காரணம்

சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணமடைய ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல, மோசமான சாலைகளும் ஒரு காரணம் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

hc
hc
author img

By

Published : Dec 4, 2019, 9:38 PM IST

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் பலர் ஹெல்மெட் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி சென்னைச் சேர்ந்த கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஐ.ஜி. சாம்சன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 2019 ஜனவரி முதல் அக்டோபர் வரை சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 47 லட்சத்து 87 ஆயிரத்து 812 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி 3,535 பேர் பலியாகியுள்ளனர். ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் சிக்கியவர்களில் 347 பேர் பலியாகியுள்ளனர் என குறிப்பிட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு முழுவதும் ஆட்டோக்களில் பக்கவாட்டு கண்ணாடி வைக்காதவர்கள் மீது 3,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், போக்குவரத்து விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாவதற்கு ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல, சாலையின் தரமும், சாலையை முறையாக பராமரிக்காததும் காரணம் என என்றனர்.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை இன்னும் முழுமையாக அமல்படுத்துவது குறித்தும், சாலைகளை மேம்படுத்துவது குறித்தும், குறிப்பாக சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளை முறையாக பராமரிப்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சாலையேர மரக்கன்று பரமாரிப்பு வழக்கு; நெடுஞ்சாலைத்துறை செயலர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Intro:Body:இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணமடைய ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல, மோசமான சாலைகளும் ஒரு காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஐ.ஜி. சாம்சன்
சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 2019 ஜனவரி முதல் அக்டோபர் வரை சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 47 லட்சத்து 87 ஆயிரத்து 812 வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளதாகவும், இக்காலகட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி 3535 பேர் பலியாகியுள்ளதாகவும், ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் சிக்கியவர்களில் 347 பேர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆட்டோக்களில் பக்கவாட்டு கண்ணாடி வைக்காதவர்கள் மீது 3,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், போக்குவரத்து விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள்,
இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாவதற்கு ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல எனவும், சாலையின் தரமும், சாலையை முறையாக பராமரிக்காததும் காரணம் எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை இன்னும் முழுமையாக அமல்படுத்துவது குறித்தும், சாலைகளை மேம்படுத்துவது குறித்தும், குறிப்பாக சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளை முறையாக பராமரிப்பது குறித்தும் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை விசாரானையை 2020 ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.