சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழையானது பரவலாக இருந்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழகம், மேற்கு தமிழகம், மேற்தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்கள், தென்கிழக்கு கடலோரா மாவட்டங்கள், மற்றும் சில உள் மாவட்டங்களில் பருவமழையானது பரவலாக பெய்து வருகிறது.
மேலும் கடந்த 24- மணி நேரத்தில், அதிகபட்சமாக, தமிழகத்தில், ராமநாதபுரத்தில்15.செ.மீ மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24- மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் 15 செ.மீ. மழையும், மண்டபத்த் 14 செ.மீ. மழையும், பாம்பன்-யில் 8 செ.மீ. மழையும், ராமேஸ்வரத்தில் 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
இதேப்போல், களக்காடு (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), ஊத்து (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும், தமிழகத்தில், சிவகங்கை,புதுக்கோட்டை, கடலூரி, தஞ்சை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, மதுரை, திண்டுக்கல், அரியலூர், தூத்துக்குடி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், தென்காசி, மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் 3 செ.மீ. முதல் 1.செ.மீ வரை மழைப்பதிவாகி உள்ளன.
இயல்பை விட குறைவு: தமிழகத்தில் பருவம்ழையானது, கடந்த அக்டோபர் மாதத்தில், 21-ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 43சதவீதம் மழைப் பொழிவு இருந்துள்ளது. நவம்பர் மாதத்தில், வடகிழக்கு பருவமழையானது,
பரவலாக பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக, தென் தமிழகம், மேற்கு தமிழகம், மேற்தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்கள், தென்கிழக்கு கடலோரா மாவட்டங்கள், மற்றும் சில உள் மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு இருந்து வருகிறது.
இந்நிலையில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரை தமிழகத்தில் 222.0 மீ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. இதன் இயல்பு அளவு 254.1 மீ.மீ ஆகும் பருவமழை இயல்பை விட 13 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது. ஆனால், நவம்பர் 1-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை,
தமிழகத்தில் பதிவான மழை அளவு என்பது. 121.4 மீ.மீ ஆகும் இது இயல்பை விட 48 சதவீதம் அதிகாம மழை பொழிவு இருந்துள்ளது, இந்த காலகட்டத்தில்(நவ.1 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை), இயல்பு அளவு என்பது 81.மீ.மீ மழை ஆகும்.
இதையும் படிங்க: தீபாவளி சிறப்பு பேருந்து: 2 நாட்களில் 3 லட்சம் பேர் பயணம்.. போக்குவரத்து துறை தகவல்!