ETV Bharat / state

பொங்கல் திருநாளில் வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

TN Weather update: வடகிழக்குப் பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15ஆம் தேதியோடு விலகுவதற்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதியுடன் முடிய வாய்ப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 2:03 PM IST

சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு பருவமழை தென் இந்தியப் பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை (13.01.2024) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 14.01.2024 முதல் 18.01.2024 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டர்): ஊத்து (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 2, மாஞ்சோலை (திருநெல்வேலி) 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 12.01.2024இல் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

13.01.2024இல் தென்மேற்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடல் வளங்களை பாதுகாக்க ரூ.1,675 கோடி செலவில் நெய்தல் மீட்சி இயக்கம்.. வனத்துறையினர் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.