இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் நோன்பு இருப்பது வழக்கம். நோன்பு இருப்பவர்களுக்கு செய்யப்படும் கஞ்சி செய்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பச்சரிசி வழங்குவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நோன்பு இருப்பவர்களின் விவரங்களை மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகங்கள் மூலம் பெறப்பட்டு, ஆவணங்களை சரிபார்த்து உறுதி செய்யப்படும். இதையடுத்து நோன்பு கஞ்சி செய்வதற்காக பள்ளிவாசல்களுக்கு தேவையான பச்சரிசியை எவ்வித இடர்பாடுகளோ, சுணக்கமோ இல்லாமல் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இதில் எந்த ஒரு வேட்பாளர்களோ, அரசியல் கட்சியோ இதன்மூலம் எவ்வித அரசியல் ஆதாயமும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்பட்டால் அதனை உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது