ETV Bharat / state

காவல் துறையினரின் வீடுகளுக்கு பால் விநியோகம் இல்லை: பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: பால் முகவர்களுக்கு காவல் துறையினரால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை காவல் துறையினரின் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்போவதில்லை என பால் முகவர்கள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No Milk supply for the Police Houses said Dairy Association

author img

By

Published : Jun 26, 2020, 2:55 PM IST

இதுகுறித்து பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ''அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.5லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழ்நாடு அரசு தடை கிடையாது என அறிவித்துள்ளது. ஆனால் பால் விநியோகத்தில் ஈடுபடும் பால் முகவர்களை பால் விநியோகம் செய்ய விடாமல் வாகனங்களை பறிமுதல் செய்வது, பால் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது என பல இடையூறுகளை காவல் துறையினர் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக முதலமைச்சர், பால்வளத்துறை அமைச்சர், காவல்துறை தலைவர், ஆணையர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த ஒரு தீர்வும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி

எனவே நாளை முதல் காவல் துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கு காவல் துறையினரால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை கடைநிலை காவலர்கள் தொடங்கி உயரலுவலர்கள் வரை அனைவரின் வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்யப் போவதில்லை'' என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மளிகைக்கடை எடை இயந்திரத்தை வெளியே எறிந்து காவல் நிலைய எழுத்தாளர் அத்துமீறல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.