தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிவருகிறது. பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் நாளை முதல் மே 24ஆம்வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. தேநீர், மளிகை, இறைச்சி, காய்கறி கடைகள் மட்டும் பகல் 12 மணிவரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து ஆகியவை வழக்கம்போல் இயங்க முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிற்துறையினர், வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தம்லைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் மே 24க்கு பின்னர் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாப்பில்லை என மு.க.ஸ்டாலின் கூறினார். மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் சூழ்நிலை உருவானால் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : சபாநாயகராகிறாரா அப்பாவு - அரசியல் பின்னணி?