ETV Bharat / state

'தமிழ்நாட்டில் யாருக்கும் கரோனா வைரஸ் இல்லை' - மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் - Corono virus

சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் கரோனா வைரஸ் இல்லையெனவும் ; 1,927 பயணிகள் பொது சுகாதாரத் துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

No Coronavirus ViruNo Coronavirus Virus In Tamil Nadu - Family Welfare Department Informations In Tamil Nadu - Family Welfare Department Information
No Coronavirus Virus In Tamil Nadu - Family Welfare Department Information
author img

By

Published : Feb 10, 2020, 11:27 PM IST

Updated : Mar 17, 2020, 6:13 PM IST

கடந்த ஒருமாத காலமாக உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ், இதுவரை 908 பேரை பலிவாங்கியுள்ளாது. மேலும் இந்த வைரஸ் இந்தியா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் பரவி பீதியைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் கண்காணிப்புக் குறித்த தகவலில், உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஏற்பட்ட கரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் 25 நாடுகளில் உள்ளது என அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்நோய் வராமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் வரும் அனைத்துப் பயணிகளும் விமான நிலையத்தில் தெர்மல் சோதனை செய்யப்படுகின்றனர். இந்தியாவிலுள்ள 22 விமான நிலையங்களிலும் தொடர்ந்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய 4 விமான நிலையங்களில் 22 ஆயிரத்து 702 பயணிகள் விமான நிலையங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1,927 பயணிகள் வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அதேபோல் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ஒரு பயணி மட்டும், தனி வார்டில் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.

மேலும், 42 பயணிகளின் ரத்தப்பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றில் சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தில் 38 பயணிகளின் ரத்த மாதிரிகளும், தொலைவிலுள்ள தேசிய வைரல் நோய்த் தடுப்பு நிறுவனத்தில் நான்கு பயணிகளில் ரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அனைத்துப் பயணிகளுக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை, வீட்டிலுள்ள பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை 908 ஆக உயர்வு!

Last Updated : Mar 17, 2020, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.