ETV Bharat / state

'மேகேதாட்டு அணையைக் கட்ட முயற்சிப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது'

author img

By

Published : Jul 16, 2021, 7:18 PM IST

மேகேதாட்டு அணையைக் கட்ட முயற்சிப்பது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.

no-action-without-board-approval
மேகேதாட்டு அணையை கட்ட முயற்சிப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது- கோபண்ணா

சென்னை: இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதியாகச் சென்று ஒன்றிய அமைச்சர் சந்திப்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் துணைத் தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிலிகுண்டுலு அருகில் 67 டிஎம்சி அடி நீர் கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்ட முயற்சி செய்வது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

மேகேதாட்டு அணையைக் கட்ட அனுமதித்தால் காவிரி நீர் அதிகம் பாயும் மாநிலமான தமிழ்நாட்டின் பாரம்பரிய நீர் உரிமை பெரிதும் பாதிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாரியத் தலைவர் பதவி?

ஜூன், ஜூலை மாதங்களில் தர வேண்டிய தண்ணீர் இதுவரை வழங்கப்படாமல் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தலைவர்கூட நியமிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அவர், மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகாவிற்கு ஒப்புதல் அளித்ததே உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை மீறிய செயல் என அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் எடுத்துரைத்ததாகவும், காவிரிப்படுகையில் எடுக்கப்படும் எந்த ஒரு புதிய நடவடிக்கைகளுக்கும் காவிரிப்படுகையில் அமைந்துள்ள மாநிலங்களின் ஒப்புதல் இருக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சரின் உறுதிமொழி

காவிரி மேலாண்மை வாரியம் அனுமதி இல்லாமல் விரிவான திட்ட அறிக்கை நடைமுறைக்கு வரக்கூடாது என அழுத்தமாகக் கூறியுள்ள அவர், கர்நாடகா காவிரி நதியில் ஏகபோக உரிமை கோர முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தி இருப்பதை சுட்டிக்காட்டினார்.

காவிரி மேலாண்மை வாரிய அனுமதி இல்லாமல் எந்த நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது எனத் தமிழ்நாடு அனைத்து கட்சிப் பிரதிநிதிகளிடம் ஜல் சக்தித் (நீராற்றல்) துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கோபண்ணா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்க - பிரதமரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.