ETV Bharat / state

‘பெண்களுக்கான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்’ - நிர்மலா சீதாராமன் பேட்டியின் முக்கிய குறிப்புகள்! - நிர்மலா சீதாராமன்

சென்னை: பல்வேறு காரணங்களால் வாகனத் துறையில் மந்தநிலை உருவாகியதாகவும், அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துவருவதகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீ்தாராமன் தெரிவித்துள்ளார்.

Nirmala sitharaman
author img

By

Published : Sep 10, 2019, 6:07 PM IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவு செய்ததையொட்டி நாடு முழுவதும் அமைச்சர்கள் அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வருகின்றனர். அந்தவகையில், அரசின் செயல்பாடுகள் குறித்தும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மே்படுத்துவது தொடர்பாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு

அப்போது அவர் தெரிவித்த கருத்துகள்:

  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் அம்மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும். அரசின் இந்த முடிவால் அம்மாநிலத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும்.
  • பெண்களுக்கான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும். நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததனால் ease of doing business என்று அழைக்கப்படும் தொழில் தொடங்க ஏதுவான நாடுகள் பட்டியலில் 142ஆவது இடத்தில் இருந்த இந்தியா 77ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதால் சரக்கு போக்குவரத்து செலவுகள் குறைந்துள்ளது.
  • பெண்களுக்கான ஊதிய முரண்பாடுகளைக் கலைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் இஸ்லாமிய பெண்களுக்கான சமூக நீதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்யும் வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளில் 1.95 கோடி வீடுகள் கட்டப்படும். ஜல் ஜீவன் மிஷன் மூலமாக வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  • நடைமுறைக்கு ஒத்துவராத 58 பழைய சட்டங்கள் திரும்பப் பெறபட்டுள்ளது. நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் இருப்பதைக் குறிக்கும் innovation index-இல் இந்தியா 52ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் மின்சார கார்கள் மற்றும் மின்சார கார்களுக்கான சார்ஜர் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு காரணங்களால் வாகனத் துறையில் மந்தநிலை உருவாகியுள்ளது. இதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
  • விற்பனை குறைந்துள்ளதால் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட வேண்டும் என தொழில் துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், வரி குறைப்பு ஜிஎஸ்டி கவுன்சில் வரம்பிற்குள் இருப்பதால் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.
  • பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்கட்டமைப்புத் துறையில் அரசு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். வங்கிகள் இணைப்பால் நாட்டில் கடன் சேவை அதிகரிக்கும் என்றும், இதனால் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகம் எடுக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.