ETV Bharat / state

வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மொபைல் எண்களுக்கு குறி.. நைஜீரிய சைபர் கிரைம் கும்பல் சிக்கியது எப்படி? - Cyber Crime number

தனியார் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை குறிவைத்து இணையதளம் மூலம் முடக்கி 17.30 லட்சம் ரூபாய் அபகரித்து மோசடி செய்ததாக நைஜீரியாவைச் சேர்ந்த 3 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மொபைல் எண்களுக்கு குறி.. நைஜீரிய சைபர் கிரைம் கும்பல் கைது

author img

By

Published : Jun 2, 2023, 6:54 AM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் பொது மேலாளர், சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில், தங்கள் நிறுவன வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டு இருந்த மொபைல் எண் முடக்கப்பட்டு, வங்கி கணக்கில் இருந்த 17.30 லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், தனியார் நிறுவன வங்கியின் தகவல்கள் சைபர் கிரைம் கும்பலால் இ-மெயில் மூலம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

பின்னர் வங்கி கணக்கோடு தொடர்புடைய மொபைல் எண்ணை பிளாக் செய்து, அதே மொபைல் எண்ணில் புது சிம் கார்டை பெற்று வங்கி பரிவர்த்தனையின்போது பெறப்படும் ஓடிபிக்களை புது சிம் கார்டு எண்ணில் பெற்று பணத்தை கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, தனியார் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு தொடர்புடைய மொபைல் எண், செல்போன் அழைப்புகளுக்கு பயன்படுத்தாமல், வெறும் வங்கி பரிமாற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை அறிந்த சைபர் கிரைம் கும்பல், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுவனம் செயல்படாதபோது, சிம் கார்டுகளை பிளாக் செய்து, அதே எண்ணில் புதிய சிம் கார்டுகளை வாங்கி மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதேபோல், சைபர் கிரைம் கும்பலில் பல்வேறு வங்கி கணக்குகளையும், மொபைல் எண்களை ஆராய்ந்தும், ஏடிஎம் மையங்களில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளைக் கொண்டும் இவ்வழக்கோடு தொடர்புடையவர்கள் பெங்களூரில் இருந்து செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பெங்களூருவில் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் தனிப்படை காவல் துறையினர், மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவைச் சேர்ந்த யூசுப் ஒலாலேகான் (30), ஒபியேலு பீட்டர் (41) மற்றும் ஒல்யூபூபே ஜேம்ஸ் (25) ஆகிய 3 பேரை நேற்றைய முன்தினம் (மே 31) கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.

பின்னர் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்டூடன்ட் விசா மற்றும் பிசினஸ் விசாவில் நைஜீரியாவில் இருந்து பெங்களூருக்கு வந்து, சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக பிஷிங் முறையில் தனியார் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் நைஜீரிய கும்பல், தாங்கள் கொள்ளையடித்த பணத்தில் 10 சதவீதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதமுள்ள பணத்தை நைஜீரிய வங்கி கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முக்கியமாக, பெங்களூரில் முகாமிட்டு தனியார் நிறுவனங்கள் தொடர்பான வங்கிக் கணக்குகள் மற்றும் செல்போன் எண்களை திருடும் நைஜீரிய கும்பல், அவற்றை நைஜீரிய நாட்டில் உள்ள தங்கள் கூட்டாளிகள் மூலமாக முடக்கி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இவ்வாறு கொள்ளையடித்த பணத்தை இந்தியாவில் செயல்படும் வங்கிக் கணக்குகளில் மாற்றி, நைஜீரியாவில் உள்ள வங்கிக் கணக்குகளில் கொள்ளையடித்த பணத்தை போடுவதற்காக பெங்களூரில் நைஜீரிய கும்பல் தங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதும் கைவரிசை காட்டும் இந்த நைஜீரிய கும்பலை, பல மாநிலங்களில் பிடிக்க முடியாத நிலையில் சென்னை சைபர் கிரைம் காவல் துறையில் முதல் முறையாக கைது செய்துள்ளனர்.

இதுவரை கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சைபர் கிரைம் பிரிவில் 9 நைஜீரியர்கள் சென்னை சைபர் கிரைம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று நைஜீரிய கும்பல்கள் பரிசுப் பொருள் மோசடி, மேட்ரிமோனியல் மோசடி, ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி என பல்வேறு நூதன முறையில் தொடர்ந்து கைவரிசை காட்டி வருவதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து 2 லேப்டாப்கள், 9 மொபைல் போன்கள், 14 சிம் கார்டுகள் மற்றும் 12 டெபிட் கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: திருமணம் ஆன ஒரே மாதத்தில் காதல் மனைவியை கொலை.. பலே நாடகம் அரங்கேற்றிய கோவை இளைஞர் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.