ETV Bharat / state

யார் இந்த மதுரை வழக்கறிஞர் அப்பாஸ்? சென்னை உயர்நீதிமன்றத்தில் NIA அதிர்ச்சி தகவல்..

தேச விரோத செயல்களில் ஈடுபட முயன்றதாக கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞர் அப்பாஸுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாகவும், இந்த வழக்கு சம்பந்தமான வழக்கு ஆவணங்களை நீதிமன்றம் ஆராயலாம் என என்ஐஏ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

advocate-abbas-detain-by-nia-based-on-solid-evidence-link-with-isis-nia-tells-mhc
வழக்கறிஞர் அப்பாசுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன - சென்னை உயர்நீதிமன்றத்தில் NIA தரப்பு வாதம்
author img

By

Published : Jun 19, 2023, 5:08 PM IST

சென்னை: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency - NIA) வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்காக ஆஜரானதற்காக அப்பாஸை கைது செய்துள்ளதாகவும், எந்த ஆதாரங்களும் இல்லாமல் வழக்கின் புலன் விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன் வாதிட்டார்.

மேலும், பென்டிரைவ் (Pendrive) கைப்பற்றியதாக, என்ஐஏ அதிகாரிகள் குற்றம் சாட்டுவதாகவும், பென்டிரைவ் வைத்திருப்பது குற்றமாகாது எனவும், அதில் ஆதாரங்கள் உள்ளதா? என கண்டறிய வேண்டும் எனவும் வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முக்கியத் தலைவராகவும், ஆயுதப் பயிற்சி அளிப்பவராகவும் இருந்தார் என எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளதாக வாதிட்டிருந்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர்கள் சங்கம், மதுரை பார் அசோசியேஷன் சார்பிலும், வழக்கறிஞர் முகமது அப்பாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, என்ஐஏ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் என்ஐஏ எச்சரிக்கையுடன் செயல்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம், இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோதே, முகமது அப்பாஸுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்த போதும், கூடுதல் ஆதாரங்களுக்காக காத்திருந்து தற்போது வழக்கில் சேர்த்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பேஸ்புக் பதிவுக்காக வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்த அவர், கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் ஆடியோ சிக்கியுள்ளதாகவும், தொலைபேசியை ஒட்டுக் கேட்டபோது கிடைத்த தகவலின் அடிப்படையிலும் இவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் இருப்பவரின் காவலை, சட்டவிரோதம் எனக் கூற முடியாது எனவும், இந்த வழக்கு தொடர்பான, கேஸ் டைரியை நீதிமன்றம் ஆராயலாம் எனவும் வாதிட்டார். இதனையடுத்து, கேஸ் டைரியையும், ஆடியோ கிளிப்பையும் தயாராக வைத்திருக்கும்படி குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: NIA-வை எச்சரித்த உயர்நீதிமன்றம்! - காரணம் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.