ETV Bharat / state

சென்னையில் 3 இடங்களில் என்ஐஏ சோதனை.. காரணம் என்ன?

NIA Raids in Chennai: சென்னையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய நபர்களின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 8:24 AM IST

சென்னை: சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை மற்றும் பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று (நவ.8) காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக் கூடிய நபர்கள் மற்றும் விசாரணையில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சென்னை புறநகர் பகுதிகளில் தங்கி இருக்கக் கூடிய மூன்று நபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளன.

மேலும், மக்களோடு மக்களாக வசித்து வரும் நபர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகள் உடன் தொடர்பில் உள்ள நிலையில், மாநில காவல்துறை பாதுகாப்புடன் என்.ஐ.ஏ தனது சோதனையை நடத்தி வருவதாகவும், சோதனைக்குப் பின்னரே முழுமையான தகவல் அளிக்கப்படும் எனவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மூன்று இடங்களில் நடத்தப்படும் சோதனையில் கிடைக்கப் பெறும் ஆவணங்கள் அடிப்படையில், இதில் வேறு யாராவது தொடர்பில் இருந்தால் இந்த சோதனை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: “ஒரு காசு கூட கைப்பற்றவில்லை” - அமைச்சர் எ.வ.வேலு கண்ணீர் மல்க பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.