1.நான்காவது முறையாக முதலமைச்சராகும் நிதிஷ்குமார்
நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் முதலமைச்சராக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இன்று நான்காவது முறையாக பிகாரின் முதலமைச்சராக அவர் பதவியேற்கிறார்.
![1.நான்காவது முறையாக முதலமைச்சராகும் நிதிஷ்குமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tamil_news_large_2294994_1611newsroom_1605477898_294.jpg)
2.சென்னையில் இன்றும் மழை நீடிக்கும்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று வரை சென்னையில் மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
![2.சென்னையில் இன்றும் மழை நீடிக்கும்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/rains-in-chennai5-1541177008-1563726937_1611newsroom_1605477898_149.jpg)
3. சபரிமலை நடை திறப்பு; பக்தர்களுக்கு அனுமதி!
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
![3. சபரிமலை நடை திறப்பு; பக்தர்களுக்கு அனுமதி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/sabarimala_710x400xt_1_0_0_1611newsroom_1605477898_68.jpeg)
4. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. அதில் திருத்தம் மேற்கொள்ள இன்றிலிருந்து டிசம்பர் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
![4. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tamil_news_large_2653112_1611newsroom_1605477898_488.jpg)