ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை பதிவாளர் நியமனம்! - சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை பதிவாளர் நியமனம்

சென்னை: உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை பதிவாளராக, புதுச்சேரி முதன்மை நீதிபதி பி. தனபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை பதிவாளர் நியமனம்

author img

By

Published : Apr 13, 2021, 2:55 PM IST

சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன், சென்னை முதன்மை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதுச்சேரி முதன்மை நீதிபதி பி. தனபால், சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளர் பூர்ணிமா, மாநிலப் போக்குவரத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, விஜிலென்ஸ் பிரிவில் கூடுதல் பதிவாளர் சாய் சரவணன், விஜிலென்ஸ் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் ஜோதிராமன், நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை நீதிபதி செந்தில்குமார் நீதித்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் முதலாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதா, சென்னை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி முதலாவது நீதிமன்றத்தின் பணிகளை கூடுதலாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், தமிழ்நாடு நீதித்துறை பயிற்சி மைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு: நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.