சென்னை: மத்திய அரசு தேசிய புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய திட்டங்களை பல்கலைக்கழக மானியக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது.
அதாவது, 4 ஆண்டுகால இளநிலை படிப்பை படித்தால், முதுகலை பயிலாமல் நேரடியாக பிஎச்டி சேர முடியும். ஏற்கனவே அமலில் உள்ள 3 ஆண்டுகால இளநிலை படிப்புகளுடன், விருப்பத்தேர்வாக 4 ஆண்டுகால முதுகலை படிப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
4 ஆண்டுகால படிப்பை விருப்பத்தின் பேரில் நேரடியாகவும், ஆன்லைன் வழியிலும், தொலைதூரக்கல்வி வழியிலும் பயில முடியும். 4 ஆண்டுகால படிப்பில் சேரும் ஒருவர், எப்போது விரும்பினாலும் பாதியில் படிப்பிலிருந்து வெளியேறி மீண்டும் எந்த உயர்கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம்.
ஏற்கனவே நேரடியாக கல்லூரிகளுக்கு செல்லாமல் ஆன்-லைன் வழியில் மாணவர்கள் பட்டப் படிப்புகளை படிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.