சென்னை : பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,”ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலம் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிகளில் நூலகம் அமைத்து மாநில அளவிலான குழுவினால் பட்டியல் தயாரிக்கப்படும்.
அந்தப் பட்டியலில் இருந்து வயது, வகுப்புவாரியாக தங்கள் பள்ளிகளுக்குத் தேவையான புத்தகங்களை அந்தந்தப் பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு மூலம் வழங்கப்படுகிறது.
2021-22ஆம் கல்வியாண்டிற்கு வயது, வகுப்புவாரியாக பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்வதற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர், திறமை வாய்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் பெயர் விவரம் அனுப்பி வைக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக உருவாகும் தமிழ்நாடு காவல் துறை