தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது தொடர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரையைக் கடந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்