ETV Bharat / state

சென்னையில் புதிதாக உடல் பரிசோதனை மையங்கள் - கரோனா பரிசோதனை மையங்கள்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா பாதித்தவர்களுக்கு முதற்கட்ட உடல் பரிசோதனை செய்வதற்காக 15 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா
கரோனா
author img

By

Published : Jan 3, 2022, 10:46 PM IST

தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இன்று (ஜனவரி 3) மட்டும் 1,728 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் 876 நபர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஒமைக்ரான் தொற்றும் வேகமாகப் பரவிவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா பாதித்தவர்களுக்கு முதற்கட்ட உடல் பரிசோதனை செய்வதற்காக 15 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் புதிதாக உடல் பரிசோதனை மையங்கள்

நாளை முதல் பரிசோதனை மையங்களில் தொற்று பாதித்த நபர்களுக்கு முதற்கட்ட உடற் பரிசோதனை தொடக்கப்படுவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மண்டலங்களிலும் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் வரும் புதன்கிழமை முதல் முழுமையாகச் செயல்பட என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Rise of Covid-19 Cases in WB | நாளை முதல் பள்ளிகள் அடைப்பு; இரவில் ஊரடங்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.