ETV Bharat / state

திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடக்கும் போது மணமக்களுக்கு புத்தாடை - இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு - TN hrce order to give new clothes for physically challenged couples getting married in temples

திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடக்கும் போது மணமக்களுக்கு திருக்கோயில் சார்பாக புத்தாடை வழங்க இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடக்கும் போது மணமக்களுக்கு புத்தாடைகள்

author img

By

Published : Jun 16, 2022, 1:06 PM IST

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாகத் திருமணம் நடத்தும் திட்டத்தை கடந்த ஆண்டு டிச.8 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனிடையே, திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடக்கும் போது மணமக்களுக்கு புத்தாடை திருக்கோயில் சார்பாக வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருக்கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களின் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், திருக்கோயில் மண்டபங்களில் வாடகையின்றி திருமணம் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் திருமணங்களில் மணமக்களுக்குத் திருக்கோயில் சார்பாக புத்தாடை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, திருக்கோவில் மற்றும் திருக்கோவில்களுக்கு சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகளின் திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடை வழங்கப்பட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த தேவையான நிதியை திருக்கோயில் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யவும் ஆணையிட்டுள்ளது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் சிறப்பு தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.