ETV Bharat / state

பற்களை பிடுங்கிய விவகாரம் - மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு!

author img

By

Published : Mar 28, 2023, 3:49 PM IST

திருநெல்வேலியில் விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கி போலீசார் கொடுமைப்படுத்திய சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைய விசாரணை பிரிவு ஐஜி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

teeth
பல்பீர்

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூரமாக நடந்து கொண்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது புகார்கள் எழுந்தன. இவர் சிறிய குற்றங்களை செய்பவர்களையும் விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று பற்களைப் பிடுங்கி தண்டிப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் வெங்கடேசன் என்பவரை, கொலை செய்ய முயன்றதாக அளிக்கப்பட்டப் புகாரில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் பல்வீர் சிங் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. விசாரணை என்ற பெயரில் கிடுக்கிகளை கொண்டு பற்களை பிடுங்கியதாகவும், அவர்களது விதைப்பைகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடந்ததாக கூறியும், அவரது விதைப்பையை நசுக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் கைதிகளின் வாயில் லத்தியால் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுதந்திரமான விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், துணை காவல் கண்காணிப்பாளர் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது. இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி 6 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆணையத் தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'கைதிகள் பல்லை பிடுங்கும் பல்பீர் சிங்' - நெல்லையில் நடந்த கொடூர சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.