ETV Bharat / state

நீட் மசோதா நிராகரிப்பு விவகாரம்: மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!

author img

By

Published : Jul 23, 2019, 10:20 PM IST

சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Neet exam exemption case , HC order to Central govt

மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம் உள்பட நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்தது தொடர்பாக 2017 செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியே தமிழ்நாடு அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் ராஜூ எஸ்.வைத்யா பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுவை படித்த நீதிபதிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளரை பதில் மனுத்தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Intro:Body:நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்த தமிழக அரசின் மசோதாக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களித்து கடந்த 2017ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம் உள்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்தது தொடர்பாக 2017 செப்டம்பர் மாதம் 22ம் தேதியே தமிழக அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்த விட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் ராஜூ எஸ்.வைத்யா பதில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுவை படித்த நீதிபதிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளரை பதில் மனுத்தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.