ETV Bharat / state

ஜூலையில் 18.46 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் - chennai metro in last july

கடந்த ஜூலை மாதத்தில் 18.46 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

nearly 19 lacks passengers travel chennai metro in last july
ஜூலையில் 18.46 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம்
author img

By

Published : Aug 3, 2021, 6:01 AM IST

சென்னை: கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடைபிடிக்கப்பட்ட பொது முடக்கத்தில் தமிழ்நாடு அரசு தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த ஜூன் 21ஆம் தேதி முதல் 50 விழுக்காடு இருக்கை வசதிகளுடன் மீண்டும் தொடங்கியது.

ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூலை மாத இறுதிவரை 22 லட்சத்து 2 ஆயிரத்து 45 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், ஜூலை மாதத்தில் மொத்தம் 18 லட்சத்து 46 ஆயிரத்து 466 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக ஜூலை 26ஆம் தேதி 74 ஆயிரத்து 380 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ததும், ஜூன் 21ஆம் தேதி முதல் மாத இறுதிக்குள் மொத்தம் 3 லட்சத்து 55 ஆயிரத்து 579 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

க்யுஆர் குறியீடு

மேலும், அந்தத் தகவலில், "2021, ஜூலை மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Codle) பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 30 ஆயிரத்து 160 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டை பயணச்சீட்டு (Travel Cad Ticketing System) முறையைப் பயன்படுத்தி 10 லட்சத்து 06 ஆயிரத்து 615 பயணிகள் பயணம் செய்துள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டில் ஒருவழிப்பயண அட்டை, இருவழிப்பயண அட்டை, பலவழி பயன்பாடு அட்டை ஆகியவற்றில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 20 விழுக்காடு கட்டண தள்ளுபடி அளித்துவருகிறது.

மெட்ரோ ரயில் பயண அட்டைகளை (Travel card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் முதல் 20விழுக்காடு கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: அனுமதிக்கு பிறகே நன்மங்கலம் மெட்ரோ திட்டத்தை தொடங்க வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.