இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இணைச் செயலர் கருப்பையா அனுப்பியுள்ள கடிதத்தில், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி ஒற்றுமை, பாதுகாப்பு, நேர்மை ஆகியவற்றை வலுப்படுத்தும் விதமாக தேசிய ஒற்றுமை நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே 31ஆம் தேதி காலை 11 மணிக்கு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த உறுதிமொழியில் ''இந்திய நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை பேணுவதற்கு என்னை உவந்து அளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.
சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையாலும் நடவடிக்கைகளால் சாதிக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள்பாதுகாப்பினை உறுதிசெய்ய எனது பங்களிப்பினை நல்குவேன்'' எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேருவின் முடிவுதான் காஷ்மீர் பிரச்னைக்கு காரணம் - அமித் ஷா