ETV Bharat / state

40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து? தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு வரும் அடுத்த ஆபத்து? - மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து

தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்து உள்ள தரநிலை விதிமுறைகளை கடைபிடிக்காத 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Medical College
Medical College
author img

By

Published : May 31, 2023, 6:01 PM IST

Updated : May 31, 2023, 7:53 PM IST

டெல்லி : நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 654 ஆக அதிகரித்து உள்ளது, கடந்த 2014 ஆம் ஆண்டு 387 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில் தற்போது 64 சதவீதம் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான எண்ணிக்கை 94 சதவீதமும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான எண்ணிக்கை 107 சதவீதமும் உயா்ந்து உள்ளது கூறப்பட்டு உள்ளது.

இந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கடைபிடிக்க வேண்டிய தரநிலை விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்து தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரத்தை புதுப்பித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் தேசிய மருத்துவ ஆணையத்தின் தரநிலை விதிமுறைகளை கடைபிடிக்காத நாடு முழுவதும் உள்ள 40 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போதிய சிசிடிவி கேமிரா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு, ஆசிரியா் பட்டியல் உள்பட தேசிய மருத்துவ ஆணையம் நிா்ணயித்துள்ள தரநிலைகளை முறையாக பின்பற்றாத காரணத்திற்காக 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு கே.ஏ.பி விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகம், குஜராத், அசாம், பஞ்சாப், ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், புதுச்சேரியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்த சிசிடிவி கேமிரா, ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைபதிவேடு, போதிய அளவிலான ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விதிகளை முறைப்படி கடைபிடிக்கவில்லை எனக் கூறி அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தரநிலை விதிகளில் அதாருடன் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டை தேசிய மருத்துவ ஆணையம் பெரிதும் நம்புவதால், அதனால் மருத்துவர்கள் கடும் சிக்கலுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டின் படி காலை 8 முதல் மதியம் 2 மணி வரை பணியாற்றும் ஆசிரியா்களை மட்டுமே தேசிய மருத்துவ ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

ஆனால், மருத்துவா்களுக்கு ஒருபோதும் நிலையான பணிநேரம் இருக்காது. சில சமயங்களில் கூடுதல் நேரம் அல்லது அவசரகாலப் பணிக்காக இரவு முழுவதும் பணியாற்ற வேண்டி இருக்கும். அந்த சூழலில் மருத்துவா்களின் பணி நேரம் மாறுபடும். அதனால் பயோமெட்ரிக் வருகைபதிவேடு விவகாரத்தில் மருத்துவ ஆணையம் காட்டும் கெடுபிடி சிக்கலானது.

இத்தகைய மேலாண்மை விதிகள் மருத்துவ கல்லூரிகளில் சாத்தியமில்லாதது. எனவே, இதுபோன்ற விவகாரங்களில் மருத்துவ ஆணையம் தளா்வுடன் அணுக வேண்டும்" என தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் கெஜ்ரிவால்... என்னவாக இருக்கும்?

Last Updated : May 31, 2023, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.