ETV Bharat / state

நன்மங்கலம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றம் - தீவு போல் காட்சி அளிக்கும் ஊராட்சி!

நன்மங்கலம் ஏரி நிரம்பி அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது, இதனால் நன்மங்கலம் ஊராட்சியிலுள்ள குடியிருப்புகள் வெள்ள நீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிக்கிறது.

தீவு போல் காட்சி அளிக்கும்  நன்மங்கலம் ஊராட்சி

author img

By

Published : Nov 7, 2021, 7:23 PM IST

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழையால் சாலைகள், வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மடிப்பாக்கம் அடுத்த நன்மங்கலம் ஊராட்சியில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக நன்மங்கலம், பொன்னியம்மன் காலடி தெரு, அம்பேத்கர் சாலை, வீரபாண்டிய நகர், இந்திரா நகர், அண்ணா நகர், கலைஞர் தெரு, கணேஷ் தெரு ஆகியப் பகுதிகளில் முழங்கால் அளவு நீர் தேங்கியுள்ளதால் அங்கு வசிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதிக்குள்ளாகினர்.

தீவு போல் காட்சி அளிக்கும் நன்மங்கலம் ஊராட்சி

நன்மங்கலம் ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக உபரி நீர் அதிகளவில் வெளியேறி வருவதால் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை – முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.