ETV Bharat / state

225 பொறியியல் கல்லூரிகள் குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால் .. அண்ணா பல்கலை.. துணை வேந்தர் எச்சரிக்கை

225 பொறியியல் கல்லூரிகள் குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால் பெயர் பட்டியல் பகிரங்கமாக வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author img

By

Published : Jul 6, 2022, 6:53 PM IST

225 பொறியியல் கல்லூரிகள் குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால் பெயர் பட்டியல் வெளியிடப்படும் - துணைவேந்தர் எச்சரிக்கை!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் 2022 - 2023 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பி.இ, பி.டெக், பி.ஆர்க். எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்.சி.ஏ ஆகிய தொழில் கல்விப்படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகத்தின் விதிமுறைகளின் படி, தகுதியான பேராசிரியர்கள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணாப் பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கிடையில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான இணைப்பு நீட்டிப்பிற்கு விண்ணப்பம் செய்த 476 கல்லூரிகளில், நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

அவற்றில் 225 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான குறைபாடுகள் உள்ளது. 62 கல்லூரிகள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையில் குறைபாடுடன் உள்ளன. தகுதியற்ற முதல்வர்களைக் கொண்டு 23 கல்லூரிகள் செயல்படுகின்றன. 166 கல்லூரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாக குறைபாடுகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில், 225 கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லாமலும், ஆய்வகங்களில் போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது.

அந்தக் கல்லூரிகளில் இரண்டு வாரங்களில் குறைகளை சரிசெய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரிகளில் குறைகளை சரிசெய்ய தவறினால் பெயர் பட்டியல் பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிடப்படும். இதனால் தரமில்லாத கல்லூரிகளின் விவரங்களை மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ளலாம்.

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு முன்னர், கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் சேர்க்கை எந்த கல்லூரியில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் சேர்ந்துள்ளனர் என்பதை பார்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நன்றாக இருக்கும் கல்லூரிகள் நடப்பாண்டிலும் நன்றாக இருக்கும். அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வின் அடிப்படையில், கல்லுரிகளின் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும்.

ஆனாலும் தன்னாட்சிக் கல்லூரிகள் அதிகளவில் இருக்கிறது. எனவே மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு முன்னர் தகுதியான ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்த பின்னர் சேர வேண்டும். அது குறித்த விவரங்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் நியமனம் - போட்டி தேர்வு அட்டவனை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.