ETV Bharat / state

ஆளுநர் ரவி என்னுடன் விவாதம் செய்யத் தயாரா? - சீமான் - நாம் தமிழர் சீமான்

'தமிழ்நாடு' என்று கூறாமல் 'தமிழகம்' என்று கூறுங்கள் என்ற ஆளுநர் ரவியின் கருத்து குறித்து அவர் என்னிடம் விவாதம் செய்ய தயாரா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 8, 2023, 5:58 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்

சென்னை: போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "தமிழ் இனத்தின் அடையாளமாக பொங்கல் பண்டிகை இருக்கிறது. எங்களுடன் உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாட்டுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடியது, தமிழ் இனம்.

ஏறு தழுவுவதை வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். நெல் அறுவடை முடித்து பண்டிகையை கொண்டாடும் காலம் இது. இதில் கபடி, உறியடித்தல், ஏறு தழுவுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். பொங்கல் பண்டிகையை கொண்டாட இருக்கின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

'பாரத நாடு, பைந்தமிழர் நாடு'. ஆளுநர் ரவி 'தமிழகம்' என்ற கருத்து குறித்து என்னிடம் விவாதம் செய்யத் தயாரா?. உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள், தமிழை தாய் மொழியாக கொண்ட நாகர்கள் தான் என அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார். ஆளுநர் ரவியிடம் சொல்லுங்கள், 'வாங்குகின்ற சம்பளத்திற்கு நிறைய வேலை இருக்கிறது. அதை போய் பாருங்கள் என்று'. செவிலியர்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பது என்னுடைய கடமை.

அதை தூண்டுவதாக கூறினால், நீங்கள் யாருடைய தூண்டுதன் பெயரில் வேலைக்கு எடுத்தீர்கள்?. பணி பாதுகாப்பு இருக்கு என்றால், ஏன் பேச்சு வார்த்தை தோல்வி அடைகிறது?. சமூக நீதி மண் என்று நீங்கள் தான் கூறினீர்கள். குடிக்கிற குடிநீரில் மலத்தை கலந்துவிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் கலந்து விடுபவன் பெரிய கூட்டமாக இருக்கிறான். வாக்கு அரசியலுக்காக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களை வெறும் வாக்குக்காக பயன்படுத்திக்கொண்டு தூக்கி தூர எறிந்து விடுகின்றனர். தமிழ் தேசியம் ஒரு மாயை என்றால், நாங்கள் இந்து, ஆரியம், திராவிடம் இது அனைத்தும் மாயை என்று நாங்கள் கூறுகிறோம். 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' ஏன் இது 'நம்ம பள்ளி கட்டமைப்பு' என்று வராதா..?.

கடற்கரையில் நம்ம சென்னை என்று உள்ளது. அதில் நம்ம என்ற வார்த்தை தமிழிலும், சென்னை என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் உள்ளது. ஏன் சென்னை என்ற வார்த்தை தமிழில் கொண்டு வரவில்லை. இப்போது தமிழை சிதைப்பது நீங்களா அல்லது நாங்களா.?. திராவிட அரசன் என்று கூறுகிறீர்கள். திராவிட அரசனின் மொழி என்ன..?. தமிழ் அரசன் என்று தானே கூற வேண்டும். எது திராவிடத்தின் மொழி.?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் பணிகளை மேற்கொள்ளலாம் - விசிக தலைவர் திருமாவளவன் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.