ETV Bharat / state

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சி வழங்க கோரிக்கை! - chennai district news

சென்னை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க கோரிக்கை

author img

By

Published : Aug 27, 2020, 5:31 PM IST

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தேர்வு கட்டணம் செலுத்தி உள்ள தனித்தேர்வு மாணவர்களுக்கும் முழு தேர்ச்சி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கரோனா தொற்றின் தீவிரத்தால் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் அரசு தேர்ச்சி வழங்கியுள்ளது.

குறிப்பாக நிலுவை பாடங்களுக்கு (அரியர்ஸ்) தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தாலே அந்த பாடங்களுக்கும் தேர்ச்சி வழங்கியுள்ளது.

தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க கோரிக்கை

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் முழுத் தேர்ச்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. பின்பு பள்ளிகள் வழியாக படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும்தான் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. தனித் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசின் கீழ் இயங்கும் உயர்கல்வித்துறை ஒரு நிலைப்பாடும், பள்ளிக்கல்வித்துறை ஒரு நிலைப்பாடும் எடுப்பது ஏற்புடையது அல்ல. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத உள்ள சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க வேண்டும்" என காணொலியில் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நோ அரியர்... அரியர் வைத்திருந்தால், ஆல் பாஸ் - முதலமைச்சர் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.