சென்னை: 2021 ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இ.வி.கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவருடைய இல்லத்தில் வெற்றியை கொண்டாடும் விதமாக கேக் வெட்டியும், படத்தில் இசையமைத்த ஒரு பாடலின் இசையை மக்களுக்காக அவருடைய ஸ்டூடியோவில் நேரில் இசை அமைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய, ஸ்ரீகாந்த் தேவா; ”என் வாழ்க்கையில் இவ்வளவு சந்தோஷம் பட்டதே இல்லை. என் கனவு நிறைவடைந்தது போல் இருக்கிறது. அந்த அளவுக்கு சந்தோஷம் என தெரிவித்தார். இந்த குறும்படத்திற்கான கதையை இயக்குனர் என்னிடம் கூறும்போதே எனக்கு மிகவும் பிடித்து போனது. கருவறையில் இருக்கும் ஒரு குழந்தையின் உணர்வை நாம் வெளிப்படுத்தும் விதமாக ஒரு இசை தேவைப்பட்டது. பல முயற்சிக்கு பிறகு தான் இந்த ராகம் கிடைத்தது எனவும் அதன் பயன் தான் இந்த வெற்றி எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 69-வது தேசிய விருது.. விருதுபெற்ற படங்கள் என்னென்ன?
அதே போல சினிமா வேறு, குறும்படம் வேறு அல்ல அனைத்தும் சினிமா தான் என்றார். என்னுடன் பயணித்த அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அடுத்த கட்டமாக தமிழக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெறுவோம் என தெரிவித்தார். பல்வேறு தலைவர்கள் மற்றும் சினிமா துறையினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மிகவும் சந்தோஷமாக உள்ளது” என்றார்.
பின்பு பேசிய இசையமைப்பாளரும், ஸ்ரீகாந்த் தந்தையுமான தேவா கூறுகையில்; ”இன்றைய தினம் ஒரு சந்தோஷமான இனிமையான நாளாக தான் பார்க்கிறேன். இந்த விருது என் மகனுக்கு கிடைத்ததில் மிகவும் சந்தோஷம். எனக்கு இந்த விருதை கிடைத்து இருந்தால் கூட இவ்வளவு சந்தோஷம் அடைந்திருப்பேனா என தெரியவில்லை என்றார்.
அதேபோல எந்த நேரமும் ஸ்டுடியோவில் தான் பயணித்துக் கொண்டிருப்பார். அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. இதற்கெல்லாம் பலன் கிடைத்துள்ளது என மகிழ்ச்சியோடு தெரிவித்தார். இந்த படத்தில் பயணித்த அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். முக்கியமாக ஸ்ரீகாந்த் தேவாவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக நான் இதை பார்க்கிறேன். தேசிய விருது பெற்ற கருவறை குறும்படத்தின் இயக்குனர் எனக்கு முதன் முதலாக ஸ்ரீகாந்த் தேவா சிவகாசி படத்தில் தான் அறிமுகமானார். திரைப்படத்தை தாண்டி நல்ல நட்பு எங்கள் இருவருக்குள் இருக்கிறது என்றார்.
என்னுடைய அடுத்த படமான கட்டில் திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க உள்ளார். கூடிய விரைவில் இத்திரைப்படம் திரையில் வெளியிட உள்ளது. கருவறை படம் பொறுத்தவரை கருவறையில் இருக்கும் சிசுவின் உணர்வை இசை மூலமாக மட்டும் தான் வெளிப்படுத்த முடியும். அந்த வகையில், அதற்காக பெரிதும் உழைத்து அதற்காக கிடைத்தது தான் இந்த விருது
என்றார். அரசாங்கம் சார்ந்த அனைவருக்கும் நன்றி. முதலில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளோம்” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: National Film Awards 2023: ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது - இயக்குநர் பார்த்திபன் நெகிழ்ச்சி!