சென்னை: வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்த அலெக்ஸ் (21), கடந்த ஆகஸ்ட் மாதம் வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக ரஞ்சித் (எ) டபுள் ரஞ்சித், சூர்யா, நவீன், ஆடு சரவணன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் திகழும் டபுள் ரஞ்சித்திடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தனது நண்பர் கருணாவை, அலெக்ஸ் கொலை செய்ததால், பழிவாங்கும் நோக்கில், அலெக்ஸை கொன்றதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
பழிக்குப் பழி...
இந்நிலையில், கடந்த வாரம் சிறையிலிருந்து வெளிவந்த புள் ரஞ்சித்தை, அலெக்ஸின் கொலைக்குப் பழி வாங்கும் விதமாக, அலெக்ஸின் கூட்டாளிகள், கொலை செய்துள்ளனர். அதுவும், எந்த இடத்தில் அலெக்ஸ் கொல்லப்பட்டாரோ, அதே இடத்தில் டபுள் ரஞ்சித்தையும் கொலை செய்துள்ளனர்.
இக்கொலை சம்பவம் குறித்து வில்லிவாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், இரு சக்கர வாகனத்தில் வந்த, 6 பேர் கொண்ட கும்பல், ரஞ்சித்தை கொலை செய்து தப்பியோடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து தப்பியோடியவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகையை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த ஆசாமிகள் - அதிரடியாக கைதுசெய்த காவல் துறை!