ETV Bharat / state

இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் -   திருமாவளவன் - vck

இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவிட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்  - நாடளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பேட்டி

author img

By

Published : May 7, 2022, 9:19 PM IST

சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஒராண்டு ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாராட்ட கூடிய வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சாதனைகளை புரிந்துள்ளார். நீண்ட அனுபவம் ஆட்சி நிர்வாகத்தில் உண்டு.

சிறப்பான நல்லாட்சி நிர்வாகத்தை ஓராண்டு காலத்தில் வழங்கி உள்ளார். இந்திய அளவில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்ட கூடிய அளவிற்கு ஆட்சி நிர்வாக திறன் உள்ளவர் ஸ்டாலின். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது. திமுக அரசு என்பதை விட சமூக நீதி அரசு என்று சொல்ல கூடிய வகையில், அனைத்து தரப்பு விளிம்பு நிலை மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க செயல் திட்டங்களைகொண்டு வருகிறார்.

பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஏழை, எளிய மக்களுக்கும் சமூக நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, சுகாதாரம் கிடைத்திட பாடுபடுகிறார். ஈழ தமிழர்களின் நலனை பாதுகாப்பதில் மக்களுக்காக உணவு பொருள் வழங்க முன் வந்திருப்பது உலக அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்து உள்ளது. இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவிட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் - நாடளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பேட்டி
ஒ.பி.சி. மக்களுக்கு மருத்துவ இடங்களில் 27 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தார். நீட் விலக்கு மசோதாவை 2 முறை கொண்டு வந்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் அமைத்தார். சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது. அதை சீர் குலைக்க மதவாத சக்திகள் இறங்கி உள்ளன. மத பிரச்சனைகளை பெரிதாக்கின்றன. ஆனாலும் அரசு வன்முறையை தூண்டும் சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.