இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “மாநில அரசுகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டவர்களை "மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைத்" தவறாகப் பயன்படுத்தி கொலை, பாலியல் வல்லுறவு போன்றவற்றில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்துவருகின்றன.
அப்படி தமிழ்நாட்டிலும் மேலவளவுப் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்றுவந்த கைதிகளை (13 பேர்) மன்னித்து விடுவித்துள்ளனர். தலித்துகள் மற்றும் பழங்குடிகளுக்கு எதிரான கொடுங்குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், மாநில அரசுகள் இவ்வாறு செயல்படுவது பாதிக்கப்படும் தலித்துகள், பழங்குடிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
எனவே, மத்திய அரசு கொலை, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...சாத்தான்குளம் வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!