ETV Bharat / state

'வாகன ஓட்டிகளே உஷார்- பார்க்கிங்கில் 2 சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட் கட்டாயம்- போக்குவரத்து காவல்துறை - சென்னை மாவட்ட செய்திகள்

பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் விதிகள் மீறினால் வாகனத்தில் சலான் ஒட்டப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

'வாகன ஓட்டிகளே உஷார்- பார்க்கிங்கில் 2 சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட் கட்டாயம்- போக்குவரத்து காவல்துறை

author img

By

Published : Feb 23, 2023, 11:05 PM IST

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பொதுமக்கள் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போக்குவரத்து தொடர்பாக புகார் தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக 2062 புகார்களை சரி செய்து இருக்கிறோம் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை சமூக வலைதளங்களில் ட்விட்டரில் 69 ஆயிரத்து 162 பொதுமக்கள் பின் தொடர்வதாகவும், அதேபோன்று முகநூலில் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் பின் தொடர்வதாகவும், இன்ஸ்டாகிராம் பகுதியிலும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதத்தில் 1267 புகார்கள் வந்துள்ளதாகவும், இதில் 90 சதவீதம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சாலைகளில் பொதுமக்கள் ஒரு வழிபாதையில் செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, மற்றும் வாகனத்தை அதிவேகமாக ஓட்டிவது மூலமாக இயக்குவது என போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், பொதுமக்களே வீடியோ மூலமாக புகார்கள் தெரிவிக்கலாம். அதன்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் கூறினார்.

குறிப்பாக போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுபவர்களின் வாகன எண், நடைபெறும் இடம் மற்றும் காலம் ஆகியவற்றோடு கூடிய புகைப்படம் மற்றும் வீடியோவோடு புகார் அளிக்குமாறு கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக சமூக வலைதளம் மூலம் புகார் அளிக்கும் வசதியை பழிவாங்கும் செயலுக்கு பயன்படுத்திக் கொண்டால் போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என எச்சரித்துள்ளார். மேலும், சென்னை காவல்துறையின் நடவடிக்கையை அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்கள் பதிவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

சென்னை போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து பல்வேறு சிறப்பு தணிக்கைகள் செய்து போக்குவரத்து விதிமுறைகளை கட்டுப்படுத்தி வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் பகுதியில் அந்தப் பகுதிக்குட்பட்ட போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதில் விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்கள் வாகனத்தில் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு சலான்கள் போக்குவரத்து போலீசாரால் ஒட்டப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறாக அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள் மீண்டும் நம்பர் பிளேட்டுகளை மாற்றாமல் போக்குவரத்து போலீசாரிடம் பிடிபட்டால் ரூ.1500 என்ற அளவில் மூன்று மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

சாலைகளில் அரசு பேருந்து பொறுத்த வரை அண்ணாநகரில் இருக்கக்கூடிய 'ஏ.என்.பி.ஆர் கேமரா' மூலமாக அதிகப்படியாக விதிமீறல்கள் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மீறி இருக்கிறார்கள் இது தொடர்பாக அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

'ஏ.என்.பி.ஆர் கேமரா' பொறுத்தவரை அரசு வாகனம், தனியார் வாகனம் என்றெல்லாம் பார்க்காது யார் விதிகளை மீறினாலும் உடனடியாக அபராதத் தொகை சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு குறுந்தகவலாக சென்று விடும் என்றார். 'ஏ.என்.பி.ஆர் கேமரா' பொறுத்த வரை தமிழ்நாடு அரசு ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இரண்டு வாரத்திற்குள் அதற்கான டெண்டர் விடப்பட்டு முதற்கட்டமாக அண்ணா சாலை, ஈகா தியேட்டர், மற்றும் மிண்ட் ஆகிய 3 பகுதிகளில் வர இருக்கிறது என தெரிவித்துள்ளார். குறிப்பாக 14 ரயில்வே நிலையத்தில் 56 அதிநவீன கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் எம் பரிவாகன் செயலி மூலம் வாகன எண்ணை பதிவிட்டு எவ்வளவு அபராத தொகை உள்ளது என தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். அவ்வாறு நிலுவையில் உள்ள அபராத தொகையை சென்னை காவல்துறையின் கால் சென்டர் உதவியுடன் உடனடியாக செலுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் கொடுத்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள் பேருந்தில் படியில் பயணம் செய்பவரிடம் அடையாளம் கண்டு சட்டம் ஒழுங்கு போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனிடையே அவர்களுடைய கல்லூரியை கண்டறிந்து கல்லூரிக்கும் தகவல்கள் கொடுக்கப்படுகிறது. அடுத்தபடியாக அவர்களுடைய பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:என்ன சொல்றீங்க.. பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணியா? - அறந்தாங்கி கடையில் அலைமோதிய கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.