ETV Bharat / state

ராஜிவ் கொலை வழக்கு: நளினிக்கு பரோல் கேட்டு அவரது தாயார் மனு

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினிக்கு பரோல் கேட்டு அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினிக்கு அவரது தாயார், பரோல் கேட்டு மனு..!

author img

By

Published : Dec 18, 2021, 7:43 AM IST

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

நிலுவையில் இருக்கும் தீர்மானம்

அதில், 2018ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை விடுவிக்கக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அது தற்போதுவரை நிலுவையில் உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய உடல்நிலை, வயது முதிர்வு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறையில் இருக்கும் தன்னுடைய மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கேட்டு கடந்த மே, ஆகஸ்ட் மாதங்களில் உள் துறைச் செயலருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காததால் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளார்.

இந்த மனு, வருகிற திங்கள்கிழமை (டிசம்பர் 20) விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: Watch Video: அதிகரிக்கும் ஒமைக்ரான் - முதியோர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்; எச்சரித்த சுகாதாரத்துறை இயக்குநர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.