கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. காவல்துறையினர் தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகளை பதிவுசெய்து அவர்களை கட்டுப்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 115 நாள்களில் தமிழ்நாடு காவல்துறை தடையை மீறியதாக எட்டு லட்சத்து 64 ஆயிரத்து 168 பேரை காவல்துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.
மேலும் ஆறு லட்சத்து 38 ஆயிரத்து 859 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். 18 கோடி 22 லட்சத்து 54 ஆயிரத்து 791 ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க... ஊரடங்கு மீறல்: சுமார் 6 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!