ETV Bharat / state

சென்னையில் மேலும் 5 மாட்டுத் தொழுவங்கள் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

author img

By

Published : Aug 16, 2023, 10:39 PM IST

Cows in Chennai: சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை அடைக்க இரண்டு இடங்களில் மட்டுமே மாட்டுத் தொழுவங்கள் இருந்த நிலையில், தற்போது மேலும் 5 இடங்களில் புதிதாக மாட்டுத் தொழுவங்கள் உருவாக்கப்பட உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை ரோட்டரி கிளப் (Chennai Rotary club) சார்பில் பள்ளியையும் அதை சார்ந்த சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், "பெருநகர சென்னை மாநகராட்சியில் தினமும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை வருகிறது. அதை நாம் சுத்தப்படுத்தி கொண்டு இருக்கிறோம். ஆனால், அந்தந்த பகுதிகளில் தூய்மை என்பது குப்பைகளை அப்புறப்படுத்துவது மட்டுமின்றி அதை உறைப்பது, மறு சுழற்சி செய்வது, ஏற்கனவே தேங்கிய குப்பைகளை தரம் பிரிப்பது, பயோமைனிங் முறையில் அப்புறப்படுத்துவது போன்றவை அடங்கும்" என கூறினார்.

வீடுகளில் குப்பை சேகரிப்பு பணி குறித்து பேசிய அவர், 80 விழுக்காடு வரை வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிப்பதாகவும், 60 விழுக்காடு நபர்கள் குப்பைகளை பிரித்து கொடுப்பதாகவும், பிரித்து தரப்படாத குப்பைகளை அந்த வளாகத்திற்குச் சென்று பிரித்து எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மாநகராட்சியின் 20 ஆயிரம் ஊழியர்கள்தான் பணியில் இருப்பதாகவும், மக்களே குப்பைகளை பிரித்து கொடுக்கலாம் என்று தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் அதை கண்டிப்பாக பின்பற்றுவதாகவும், நாமும் அதை கண்டிப்பை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். மேலும், நூறு கிலோவுக்கு மேல் குப்பை போடுபவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தான் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் நல்ல மாற்றமும், வெற்றியும் கிடைத்திருக்கின்றது என்றும், முழுமையான வெற்றி வேண்டும் என்றால் எல்லாருடைய பங்களிப்பும் அவசியமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.

தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் மாடு மற்றும் மாட்டு உரிமையாளர்களின் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை அடைக்க இரண்டு இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது மேலும் 5 மாட்டுத் தொழுவங்கள் புதிதாக உருவாக்கப்படும்" என தெரிவித்தார்.

மேலும், அரும்பாக்கத்தில் சிறுமி மீது மாடு முட்டிய சம்பவத்திற்குப் பிறகு, சாலையில் சுற்றித் திரிந்த 126 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது என்றும், ஒவ்வொரு மாடுகளை பிடிக்கும்போது கவனமாக பிடிப்பதாகவும், குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் மாடுகளை கவனமாக பிடிப்பதாகவும் கூறினார்.

"மாட்டையும், கன்றையும் பிரிக்க மாட்டோம். பால் கொடுக்கும் மாடுகளை பால் கறப்பதற்கு வசதிகளும் கொண்டு வருகிறோம். திருவல்லிக்கேணி உள்ளிட்ட சில இடங்களில் மாட்டு உரிமையாளர்கள் தனி இடம் கேட்கிறார்கள். ஆனால், மாநகராட்சி பகுதியில் இப்படி செய்வது இயலாதா காரியம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10,000 சுய உதவிக் குழுக்களை உருவாக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.