ETV Bharat / state

'அரிசி கொடுத்த மூப்பனார்; நன்றி மறந்த கே.எஸ். அழகிரி' - கராத்தே தியாகராஜன் சாடல்

சென்னை: கே.எஸ். அழகியின் சாப்பாட்டிற்கு அரிசி கொடுத்தவர் மூப்பனார் அவருக்கு அந்த நன்றி கூட இல்லை என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

mooppanar
author img

By

Published : Aug 30, 2019, 1:19 PM IST

மூப்பனார் குடும்பம் தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற விவசாயக் குடும்பமாக இருந்தது. காங்கிரசின் மூத்த தலைவராக இருந்த அவர், அரசியல் பொது வாழ்க்கையில், தூய்மை, நேர்மை வளமான தமிழ்நாட்டை வலிமைப்படுத்த மற்ற தலைவர்களின் செயல்பாடுகளில் இருந்து மாறுபட்டு காணப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த மூப்பனார் மறைந்து இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள அவரது நினைவிடத்தில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை, அரசியலில் தூய்மையை கடைபிடித்தவர் மூப்பனார். அவரின் மகன் வாசனும் அவ்வாறே அரசியலில் தூய்மையை கடைபிடித்து வருகிறார் என்று தெரிவித்தார்.

இவர்களைத் தொடர்ந்து, மூப்பனாரின் நினைவிடத்தில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மூப்பனார் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கராத்தே தியாகராஜன், கே.எஸ். அழகிரி சாப்பாட்டிற்கு இல்லாமல் சிரமப்பட்ட போது 10 மூட்டைகளில் அரிசி வழங்கி உதவியவர்தான் மூப்பனார். ஆனால் அழகிரிக்கு அந்த நன்றி இல்லை என்றார்.

முன்னதாக மூப்பனாரின் மகனும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே. வாசன் பள்ளிக் குழந்தைகளுடன் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், என்.ஆர். தனபாலன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 30.08.19

அரசியல் வாழ்வில் தூய்மையை கடைபிடித்தவர் மூப்பனார்.. தமிழிசை பேட்டி..

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முத்த தலைவரான மூப்பனார் மறைந்து 18 ஆண்டுகள் ஆகிய நிலையில் அவரின் நினைவிடம் சென்னை தி.நகரில் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தமிழிசை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்..

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் மூப்பனார் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்..

அப்போது பேசிய தமிழிசை, அரசியலில் தூய்மையை கடைபிடித்தவர் மூப்பனார்.. அவரின் மகன் வாசனும் அவ்வாறே அரசியலில் தூய்மையை கடைபிடிக்கின்றவராக உள்ளார் என்றார்.

முன்னதாக மூப்பனாரின் மகனும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசன் பள்ளிக் குழந்தைகளுடன் அஞ்சலி செலுத்தினார்.. தொடர்ந்து, குமரி அனந்தன், என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்..

tn_che_01_moppanar_memorial_tamilisai_byte_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.