கடந்த கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஜூலை 19 ஆம் தேதி வெளியிட்டார்.
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாதமும் அலகுத் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இத்தேர்வுகள் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் 50 மதிப்பெண்கள் கொண்டு நடைபெறும். தேர்வு காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும். மேலும் கல்வி தொலைகாட்சி மூலமும், வாட்ஸ் அப் வாயிலாகவும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் அலகுத் தேர்வு சாத்தியமா? - கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம்