சென்னை: இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், "கிழக்கு திசை காற்று வங்க கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் நிலை வரும் சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் புதுவை, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் இன்று முதல் துவங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 8 சென்டி மீட்டரும், புதுச்சேரியில் 7 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அடுத்த ஐந்து நாட்களில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழ்நாடு, கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து இரண்டு தினங்களுக்கு மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை எதுவுமில்லை என்று கூறினார்.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி, கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உள்ள இலங்கையையொட்டி நிலவுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் வட தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றின் ஈரப்பத அளவு மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து புயல் நிலவுகிறது. வடகிழக்கு பருவமழையை பொறுத்த வரை தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்யக்கூடும்" என கூறினார்.
இதையும் படிங்க:தொடங்கியது வடகிழக்கு பருவ மழை