ETV Bharat / state

’காய்கறி கடைக்கான அனுமதி சீட்டு அலுவலர்களிடம் கிடைக்கும்’ - சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை: நடமாடும் காய்கறி கடைகளை நடத்துவதற்கான அனுமதி சீட்டை மாநகராட்சி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
author img

By

Published : Apr 9, 2020, 3:49 PM IST

கரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் சிரமமின்றி அடிப்படை பொருள்கள் கிடைப்பதற்காக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:

இத்தருணத்தில் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று வண்டிகள் மூலம் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்வதற்கு விருப்பமுள்ள நிறுவனங்கள், தனிநபர்கள் மாநகராட்சி அலுவலகங்களில் மண்டல வாரியாக தொடர்புகொண்டு அந்தந்த அலுவலகங்களில் அனுமதி சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அனுமதி சீட்டு நடமாடும் மளிகை, காய்கறி வாகனங்களுடன் செல்பவருக்கு எந்தவித சிரமங்களுக்கும் உட்படாமல் இருப்பதற்காக அளிக்கப்படுகிறது. இந்த சிறப்பு அனுமதி, ஊரடங்கு திரும்பப் பெறும்வரை செல்லுபடியாகும். எனவே விருப்பமுள்ள நிறுவனங்கள், தனி நபர்கள் தங்களுக்குத் தேவையான அனுமதி சீட்டு, பதாகைகளை மண்டல அலுவலர்களிடம் நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவிலிருந்து மளிகைப் பொருள்கள் வருவதில் சிக்கல் - விக்கிரமராஜா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.