ETV Bharat / state

இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கும் ராகுல் - உதயநிதி வாழ்த்து - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

52ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
author img

By

Published : Jun 19, 2021, 2:21 PM IST

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல் காந்தியின் 52ஆவது பிறந்தநாள் விழா இன்று (ஜூன் 19) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித்தலைவர்கள் உள்பட பலதரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்க காங்கிரஸ் பேரியக்கத்தோடு கருணாநிதி வழியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டலில் நாங்கள் என்றும் தோளோடு தோள் நிற்போம். ராகுலுக்கு அன்பும் வாழ்த்தும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Most Eligible Bachelor ராகுல் காந்திக்கு பிறந்தநாள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.