சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா அண்மையில் விடுதலையாகி பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பினார். இந்நிலையில் நேற்று (பிப்.24) சசிகலாவை திநகரில் உள்ள அவரது இல்லத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இன்று (பிப்.25) சசிகலாவை கொங்கு இளைஞர் பேரவை கட்சி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தனியரசு சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து சசிகலாவை இயக்குநர் லிங்குசாமி, நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்தனர்.
இதையும் படிங்க: சசிகலாவுடன் சீமான் திடீர் சந்திப்பு; ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை!