ETV Bharat / state

அதிமுக எம்எல்ஏவிடமிருந்து மகளை மீட்டுதரக்கோரி தந்தை ஆட்கொணர்வு மனு: இன்று விசாரணை...! - MLA Prabhu father in law file petition in Chennai HC

சென்னை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவால் கடத்தப்பட்ட தனது மகளை மீட்க கோரிய சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை இன்று (அக். 8) உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

அதிமுக எம்எல்ஏவிடமிருந்து மகளை மீட்டுதரக்கோரி தந்தை ஆட்கொணர்வு மனுதாக்கல்: இன்று விசாரணை...!

author img

By

Published : Oct 8, 2020, 10:38 AM IST

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரான பிரபு, சௌந்தர்யா என்ற கல்லூரி மாணவியை அக்டோம்பர் 5ஆம் தேதி திடீரென காதல் திருமணம் செய்துகொண்டார். இச்சூழலில், இவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தியாகதுருகத்தைச் சேர்ந்த பெண்ணின் தந்தையான சுவாமிநாதன், ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், “தனது மகள் செளந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இரண்டாமாண்டு படித்து வருவதாகவும், தன்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல் துறையில் புகாரளித்தும், ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகாரளித்ததால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதால், தனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென சுவாமிநாதன் தரப்பில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் முறையிடப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் இன்று இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...கள்ளக்குறிச்சி எம்எல்ஏ காதல் திருமணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.